Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 20 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் ராஜூவ் நகர்
பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (42) சின்ன கவுண்டர் பகுதியில் உள்ள அரசு
பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அதேபோல இவருடைய மனைவி கில்பட் சபீனா ராணி (43) அரசு நிதி உதவி பெறும் பள்ளியான
மேரிஇம்மாக்குலேட் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இருவரும் பள்ளிக்குச் சென்ற நிலையில் இதனை அறிந்த மர்ம நபர்கள்
வீட்டில் உள்ளே புகுந்து வீட்டின் வெளிய வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து
வீட்டை திறந்து உள்ளே புகுந்துள்ளனர்.
பின்னர் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த
40 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சுப்பிரமணி வீட்டின் பீரோ
உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் பீரோவை சோதனை செய்ததில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் தங்க நகை
திருடு போனது தெரிய வந்தது இது குறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில்
ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இத் திருடு குறித்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப் பகலில் ஆசிரியர்கள் வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 40 சவரன்
தங்க நகை திருடி சம்பவம் ஜோலார்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam