சென்னை மருத்துவக் கல்லூரியில் ரேகிங் கொடுமை - மருத்துவ மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட்!
சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.) சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2021ம் ஆண்டு பேட்ச் மாணவன் நிகேஷ் பாபுவுக்கு ரேகிங்...ஒருநாள் முழுவதும் முட்டி போட வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட நிகேஷ் பாபு கல்லூரியிலிருந்து திடீரென மாயமானார். இந்நிலையில்.,ம
Mmc


சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2021ம் ஆண்டு பேட்ச் மாணவன் நிகேஷ் பாபுவுக்கு ரேகிங்...ஒருநாள் முழுவதும் முட்டி போட வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட நிகேஷ் பாபு கல்லூரியிலிருந்து திடீரென மாயமானார்.

இந்நிலையில்.,மருத்துவப் படிப்பைக் கைவிடுவதாகத் தந்தையிடம் சென்று அழுதுபுலம்பியுள்ளார்.அவரது அளித்த புகாரின் பேரில் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரும் ஸ்போர்ட்ஸ் செகரட்டரியுமான தேவமூர்த்தி, சூர்யா, சேதுபதி, ஹரிஹர சுதன், ஹியாம் சுந்தன், ஆதன் டொனால்ட் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ரேகிங் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நிகேஷ் பாபுவின் தந்தை புகாரளித்துள்ளார்.

மேலும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.

6 பேரும் திங்கட்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ