Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 20 டிசம்பர் (ஹி.ச.)
பிரபல மலையாள நடிகர் சீனிவாசன், 69. இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.
இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.
இவர் பிரபல இயக்குநர் வினித் சீனிவாசன் தந்தை.
இவர் 225 படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் லேசா லேசா, இரட்டை சுழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சிந்தா விஸ்டயாய ஷியாமலா படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
நடிகர், இயக்குநர், வசனகர்த்தா என பன்முகத் திறமைக் கொண்ட சீனிவாசன் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM