மதுரவாயல் தொகுதியில் 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.) சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தாளை முன்னிட்டு திமுக சார்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரவாயல் எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ம
மா.சுப்பிரமணியன்


சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தாளை

முன்னிட்டு திமுக சார்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரவாயல்

எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர்

கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

SIR

பணிகளுக்குப் பிறகு மதுரவாயல் தொகுதியிலிருந்து மட்டும் ஒரு லட்சத்து 25

ஆயிரத்து 701 பேர் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மதுரவாயல்

தொகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்து 741 ஆக

இருந்ததாகவும், தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் 3 லட்சத்து 17 ஆயிரத்து

670 பேர் மட்டுமே இருப்பதாகவும் கூறினார்.

அதிலும் 50 ஆயிரம் பேருக்கு கூடுதல்

ஆவணங்களை சமர்பிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பாதகவும், தவறும் பட்சத்தில்

அவர்களது வாக்குகளும் தகுதிநீக்கம் ஆகும் என குறிப்பிட்டார்.

எனவே அனைவரும்

வரைவு வாக்களர் பட்டியல் வந்தவுடன் தங்களது வாக்குகள் இருக்கிறதா? என்பதை

உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam