Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 20 டிசம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் ஐயப்ப பக்தர்கள் மற்றும் விடுமுறை காரணமாக குவிந்த பக்தர்கள் கூட்டத்தில் உண்டியல் நிரம்பியது. இருநாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து பிரித்து எண்ணப்பட்டது.
இருநாள் எண்ணிக்கை முடிவில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் 4 கோடியே 8 லட்சத்து 43 ஆயிரத்து 113 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
தங்கம் 800 கிராமும், வெள்ளி 11,275 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 574 ம் கிடைத்தன.
இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.
உண்டியல் எண்ணிக்கையில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN