தமிழகத்தில், 2022 - 2025 ம் ஆண்டு வரை 636 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர் - தமிழக உள்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்கூட்டி விடுதலை குறித்த அரசின் கொள்கைகளை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து எடுத்த இந்த வழக்கில், முன்கூட்டி விடுதலை செய்ய தகுதியான கைதிகளை அடையாள
Jail


சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்கூட்டி விடுதலை குறித்த அரசின் கொள்கைகளை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து எடுத்த இந்த வழக்கில்,

முன்கூட்டி விடுதலை செய்ய தகுதியான கைதிகளை அடையாளம் காண மாநில அளவில் குழு அமைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என உள்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

14 ஆண்டுகள் தண்டனையை முடித்த, 307 கைதிகளில் 43 பேர் முன்கூட்டி விடுதலை செய்ய தகுதி பெற்றுள்ளனர் எனவும் பாலியல், போக்சோ வழக்குகளில் தண்டிக்கப்பட்ட கைதிகள், முன்கூட்டி விடுதலை பெற தகுதியில்லை என உள்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 6 ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் பி.வேல்முருகன், எம். ஜோதிராமன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ