Enter your Email Address to subscribe to our newsletters

ஆகமதாபாத், 20 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைப்போல குஜராத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்தது. இந்த பணிகளுக்குப்பின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக குஜராத்தில், சுமார் 74 லட்சம் அதாவது 73.73 லட்சம் (14.50%) பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் எஸ்.ஐ.ஆருக்கு முன்பு, 5,08,43,436 வாக்காளர்கள் இருந்தனர், தற்போது 4,43,70,109 பேர் வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நீக்கப்பட்ட வாக்காளர்களில் இறந்தவர்கள் 18.07 லட்சம், இருப்பிடம் தெரியாதவர்கள் 9.69 லட்சம், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள் 40.25 லட்சம், 2 இடங்களில் பதிவு செய்திருந்தவர்கள் 3.81 லட்சம் பேர் அடங்குவர்.
இதன் மூலம் மாநில வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஹரீத் சுக்லா கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM