Enter your Email Address to subscribe to our newsletters

தெலங்கானா, 20 டிசம்பர் (ஹி.ச.)
நல்கொண்டா மாவட்டம் சந்தூரு மண்டலம் ஜோகிகூடெம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி
சிவானி அதே பகுதியில் உள்ள அரசு குருகுல கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு
(B.Sc.) படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவி ஷிவானி கல்லூரி கட்டிடத்தின் மூன்றாவது தளத்திலிருந்து
கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் பலத்த காயமடைந்த அவரை சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக
சிகிச்சைக்காக நல்கொண்டா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர்.
தற்போது அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மாணவி எழுதி வைத்திருந்த தற்கொலை
முயற்சிக்கான காரணம் பற்றி கடிதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்துகின்றனர்.
அந்த கடிதத்தில் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக தற்கொலை செய்து
கொள்வதாக மாணவி குறிப்பிட்டுள்ளதாகவும், தன்னுடைய இந்த செயலுக்கு வேறு
யாரும் காரணமல்ல என்றும் எழுதி வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam