Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 20 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்பு அதிக அளவில் நடைபெறுகிறது.
தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து கறிக்கோழி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வளர்ப்பு கூலி 6 ரூபாய் 50 பைசா வழங்கப்பட்டு வரும் நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, வளர்ப்பு கூலியை 20 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வளர்ப்பு கூலியை உயர்த்தாவிட்டால், கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு இது குறித்து உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள கறிக்கோழி பண்ணை விவசாயிகள், வரும் 1-ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM