Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 21 டிசம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் வருகை தந்தார். அப்போது ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜி.கே.வாசன் கூறுகையில்,
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் வலுவாக உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் அதிகமான கட்சிகள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது.
ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி ஏழை மக்களுக்கு பயன் தர வகையில் மருத்துவ சேவை செய்யும் வகையில் சுகாதாரத்துறை மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
ஆலங்குளத்தில் பல கிராமங்கள் - பல்லாயிர கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் உள்ள தொட்டியான் குளத்தை தூர்வார வேண்டும்.
ஆலங்குளம் வட்டாரம் கடையும் பகுதியில் நீதிமன்ற உத்தரவு மேரி அதிகமாக கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. இது தடுத்து நிறுத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN