Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை அண்ணாநகர் இரண்டாவது அவன்யூவில் இன்று நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் குழந்தைகள் இளைஞர்கள் பெரியவர்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி வைப் செய்தனர்.
ஆரோக்கியம், உடற்பயிற்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தை வேடிக்கையான முறையில் ஊக்குவிக்கும் வகையில் சென்னை பெருநகர மாநகராட்சி , சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ஹேப்பி ட்ரீட் நிகழ்ச்சி சென்னையில் கடந்த ஒரு சில மாதங்களாக நடைபெறாமல் இருந்தது .
இந்நிலையில் இன்று சென்னை அண்ணா நகர் 2வது அவன்யூவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் இளைஞர்கள் பெரியவர்கள் என பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு விளையாடியும் நடனமாடியும் தங்களது ஞாயிற்றுக்கிழமை அதிகாலைப் பொழுதை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
மேலும் வரும் வார இறுதி நாட்களிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam