Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச.)
கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க நகர் தொகுதியில் புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையில் உள்ள தொன்பாஸ்கோ பாலிடெக்னிக் வளாகத்தில், மேயர் பிரியா ஏற்பாட்டில், இன்று (டிசம்பர் 21) மாலை 4.30 மணியளவில் 1500 குடும்பத்தினருக்கு பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
இதில்,அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர், கலாநிதி வீராசாமி எம்பி, துணை அமைப்பு செயலாளர் ப.தாயகம்கவி எம்எல்ஏ, அருட்தந்தை ஜாய்குரியன் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 1500 குடும்பங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இதில் பி.வில்சன் எம்பி, ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் பிரதம குருக்கள் டி.எஸ்.காளிதாஸ் சிவாச்சாரியார், பிராட்வே மெர்ச்சன்ட்ஸ் வெல்பர் அசோசியேஷன் மற்றும் போரா முஸ்லிம் அசோசியேஷன் தலைவரான ஒய்.ஜே.பாகீர் பாய், சென்னை லயோலா கல்லூரி அதிபர் அந்தோணி ராபின்சன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, சென்னை லூர்து பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் அமலா ரஜினி, எம்எல்ஏக்கள் ஜோசப் சாமுவேல், அ.வெற்றி அழகன், இ.பரந்தாமன், முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன், செ.தமிழ்வேந்தன், எம்.சாமிக்கண்ணு, பெரம்பூர் ராஜன், புனிதவதி எத்திராசன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b