கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் பொம்மைகள்,ஸ்டார் விற்பனை மும்முரம்
தூத்துக்குடி, 21 டிசம்பர் (ஹி.ச.) உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதன் ஒருபகுதியாக தேவாலயங்களிலும், வீடுகளிலும் இயேசு கிறிஸ்துவின் ப
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் பொம்மைகள்,ஸ்டார் விற்பனை மும்முரம்


தூத்துக்குடி, 21 டிசம்பர் (ஹி.ச.)

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

இதன் ஒருபகுதியாக தேவாலயங்களிலும், வீடுகளிலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை காட்சிப்படுத்தும் வகையில், சிறிய குடில் அமைக்கின்றனர்.

இந்த குடிலுக்குள், குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், தேவதூதர்கள், மூன்று அரசர்கள் ஆகியோரின் சிறிய வடிவ பொம்மைகள் வைக்கப்படும். இவர்களோடு பெத்லகேமின் விண்மீன், ஒட்டகம், ஆடு, காளை, கழுதை உள்ளிட்ட விலங்குகளும் இடம்பெறும். இந்நிகழ்வு மலைக்குகையிலோ அல்லது மாட்டுத் தொழுவத்திலோ நிகழ்வது போன்று அமைக்கப்படும்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால், பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை செய்ய தூதுக்குடியின் முக்கிய சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.இங்கு காகிதத்தால் ஆன நட்சத்திரங்கள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நட்சத்திரங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விதவிதமான நட்சத்திரங்கள், டிராகன், லோட்டஸ், சொரூபம், கிரேப்ஸ் பந்து போன்று தொங்கும் நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் டிராகன், லோட்டஸ், சொரூபம், கிரேப்ஸ் பந்து போன்று தொங்கும் நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை ரூ.150 முதல் ரூ.950 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குடில்கள் அமைக்க தேவையான பொருட்கள், ஏசு கிறிஸ்து சிலை, பொம்மைகள், அலங்கார பல்புகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b