Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 21 டிசம்பர் (ஹி.ச.)
நெல்லை மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் 101 கோடி மதிப்பீட்டில் 45477
பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி 694.02 கோடி மதிப்பிலான
முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு தமிழக முதல்வர்
மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஆக தமிழக முதலமைச்சர் நெல்லை மாவட்டத்திற்கு
வருகை தந்தார்.
தொடர்ந்து நேற்றைய தினம் பொருநை அருங்காட்சியக திறப்பு விழா, கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளிட்ட விழாக்களில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டார்.
இன்று (டிசம்பர் 21) நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு நெல்லை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேம்பாட்டு கட்டிடம், மேலப்பாளையம் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் என 234 கோடியே 94 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 33
பணிகளை திறந்து வைத்தார்.
தொடர்ந்து காகிதம் உள்ள அறிவு சார் மையம்,
நரசிங்கநல்லூர் பகுதியில் புதிய சிட்கோ மையம் என புதிய 11 திட்டங்களுக்கு
அடிக்கல் நாட்டினார்.
பின்னர் 101.49 கோடி மதிப்பில் 45,477 பயனாளிகளுக்கு அரசு
நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் வழங்கினர் மொத்தமாக நெல்லை மாவட்டத்தில்
நடைபெற்ற அரசு விழாவில் 694.02 கோடி மதிப்பீட்டில் உன் நலத்திட்ட உதவிகளை
தமிழக முதலமைச்சர் வழங்கினர்.
விழாவிற்கு முன்னதாக நெல்லை மாவட்டத்தில்
செயல்படுத்தப்பட உள்ள புதிய 11 பேருந்துகளை கொடியை சேர்த்து தொடங்கி வைத்த
தமிழக முதலமைச்சர் மாற்றத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் மற்றும் மகளிர்
திட்டம் வேளாண்துறை தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரங்கங்களை
திறந்து வைத்து பார்வையிட்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam