Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 டிசம்பர் (ஹி.ச.)
கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையிலும் மிகப்பெரிய மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோயம்புத்தூர் மாரத்தான் 2025 எனும் மாரத்தான் போட்டி கோவை வ உ சி பூங்கா அருகே நடைபெற்றது.
கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த மராத்தான் ஓட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன் போட்டியாளர்களுடன் பங்கேற்று ஓடினர்.
வ.உ.சி மைதனாம் அருகே துவங்கிய ஓட்டத்தில் 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5கிலோ மீட்டர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஓட்டம் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதில் கலந்து கொண்டனர்.
வ உ சி பூங்கா அடுத்த ஸ்டேன்ஸ் பள்ளி மைதானம் அருகே துவங்கிய மராத்தான் ஓட்டம் அவினாசி சாலை,பந்தய சாலை,திருச்சி சாலை என முக்கிய சாலைகள் வழியே சென்று பாலசுந்தரம் சாலை வழியாக மீண்டு ஸ்டேன்ஸ் பள்ளி மைதானத்தில் முடிவடைந்தது.
தொடர்ந்து மராத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற ஒவ்வொரு விரிவினருக்கும் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே பரிசுகள் வழங்கபட்டது.
முன்னதாக இது குறித்து பேசிய கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டியான டாக்டர் டி பாலாஜி,
இது சாதனை படைக்கும் பதிவு எண்ணிக்கையுடன் கூடிய மற்றொரு வெற்றிகரமான நிகழ்வு என்றும் நம்மால் உலகத்தரம் வாய்ந்த மாரத்தான் ஓட்டத்தை நடத்த முடிந்ததற்கு, மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களின் உதவிக்கு நன்றி என்றும் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam