புதுச்சேரியில் 5 கிலோமீட்டர் தூரம் சாலையில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வை  ஏற்படுத்திய மத்திய அமைச்சர்
புதுச்சேரி, 21 டிசம்பர் (ஹி.ச.) மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சகத்தின் ''ஃபிட் இந்தியா (Fit India) திட்டத்தின்கீழ் ''சண்டேஸ் ஆன் சைக்கிள்ஸ்'' (Sundays on Cycles) இயக்கத்தின் முதல் ஆண்டு விழா கடற்கரை சாலை காந்தி சிலை அ
சைக்கிள் பேரணி


புதுச்சேரி, 21 டிசம்பர் (ஹி.ச.)

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சகத்தின் 'ஃபிட் இந்தியா

(Fit India) திட்டத்தின்கீழ் 'சண்டேஸ் ஆன் சைக்கிள்ஸ்' (Sundays on Cycles)

இயக்கத்தின் முதல் ஆண்டு விழா கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் இன்று

நடைபெற்றது.

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள்துறை அமைச்சர் மன்சுக்

மாண்டவியா, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர்

கலந்து கொண்டனர்.

விழாவில், ஃபிட் இந்தியா செயலி மூலம் அதிக தூரம் சைக்கிள்

ஓட்டி அதிக புள்ளிகள் எடுத்த முதல் மூன்று பேருக்கு மத்திய அமைச்சர், துணைநிலை

ஆளுநர் மற்றும் முதலமைச்சர் மிதிவண்டிகள் வழங்கி கௌரவித்தனர்.

இளைஞர்களின் சைக்கிள் பேரணியை முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி

வைத்தனர்.

பேரணியில் மத்திய அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத் சவுகான், கேல் ரத்னா விருதாளர்கள் பி.ஆர். ராஜேஷ், சரத் கமல்,

ஆகியோர் 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று சைக்கிள் ஓட்டம் பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்

நமச்சிவாயம்,

புதுச்சேரியில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க 30 தொகுதிகளிலும் தலா 10 கோடி

ரூபாய் செலவில் தடகள மைதானம் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam