தவெக தலைவர் விஜய் தலைமையில் நாளை சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா
சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச.) நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ''ஃபோர் பாயிண்ட்ஸ்'' கன்வென்ஷன் சென்டரில் நாளை (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது. இது குறித்து த
தவெக தலைவர் விஜய் தலைமையில் நாளை  சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா


சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச.)

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள 'ஃபோர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நாளை (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது.

இது குறித்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று (டிசம்பர் 21) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு:

மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா, நாளை (22.12.2025, திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகோதர சகோதரிகளுக்கு QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு

என்.ஆனந்த்,

பொதுச் செயலாளர்,

தலைமை நிலையச் செயலகம்

(Party Headquarters Secretariat),

தமிழக வெற்றிக் கழகம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b