Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு , 21 டிசம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், தமிழக சுற்றுலாதுறை மற்றும் இந்திய சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் இந்திய நாட்டிய விழா இன்று (டிசம்பர் 21) மாலை 5.30 மணிக்கு சென்னை இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கல இசையுடன் தொடங்குகிறது.
இந்த நாட்டிய விழா வரும் ஜனவரி 19-ம் தேதி வரை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகள், கதகளி, ஒடிசி, குச்சிப்புடி, கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மோகினி ஆட்டம், பறையாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நடனங்கள் நடைபெறுகின்றன.
சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் மற்றும் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழாவை துவக்கி வைக்கின்றனர்.
விழாவில் சுற்றுலாத்துறை அதிகாரிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த நாட்டிய விழா தினமும் மாலை 5.30 மணிக்கு துவங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
Hindusthan Samachar / vidya.b