Enter your Email Address to subscribe to our newsletters

மேற்கு வங்கம், 21 டிசம்பர் (ஹி.ச.)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005ஐ ரத்து செய்து, அதற்குப் பதிலாக வி பி – ஜி ராம் ஜி, 2025 சட்டமுன்வடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் ரத்து நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக, மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது.
ஆனால், ஏழைகளை ஒரு போதும் நாங்கள் கைவிட மாட்டோம் எனக் கூறிய மமதா பானர்ஜி, கர்மஸ்ரீ வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மகாத்மா காந்தி கர்மஸ்ரீ எனப் பெயர் மாற்றம் செய்து, அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM