Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 21 டிசம்பர் (ஹி.ச)
தமிழகத்தில் முதல்முறையாக உதகையில் நாய்களுக்காக ரூ.40 லட்சம் செலவில் பிரத்தியேகமாக பூங்கா திறக்கப்பட்டது.
விளையாட்டு தளம், குடிநீர், நடைப்பாதை தளம், பார்வையாளர் மாடம், குளிப்பாட்ட ஷவர் உள்ளிட்டவை நாய்களுக்காக பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ளளது.
இந்த பூங்காவில் ஒரு நாய்க்கு பத்து ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
மனிதர்களுடன் மிக நெருக்கமாக பழகும் செல்லப் பிராணிகள் பட்டியலில் நாய்கள் முதலிடம் பிடிக்கிறது. நாய் வெறும் விலங்காக மட்டுமில்லாமல் மனிதர்களுடன் உணர்வுப்பூர்வமாக பழகும் தன்மையை கொண்டிருக்கிறது.
நன்றியுடன் இருப்பது நாய்கள் மற்ற விலங்குகளிடமிருந்து தனித்துவத்தை காட்டுகிறது. வீட்டில் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவும், காலை மற்றும் மாலை வேளையில் நாய்களுடன் நடை பயிற்சி செய்வதையும் பலரும் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் சர்வதேச சுற்றுலாத்தலமான உதகைக்கு தமிழ்கம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது செல்லப் பிராணியான நாயையும் அழைத்து வருகின்றனர்.
ஆனால் இங்குள்ள பொதுவான பூங்காக்கள் படகு இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு நாயை அவர்களால் அழைத்துச் செல்ல முடியாமல் அவற்றை தனியாக அறையில் விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்ப்பதற்காகவும் உதகையில் நாய்கள் வளர்ப்பவர்கள் அவற்றை தனியாக நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்வதற்காகவும் நாய்களுக்காக பிரத்தியேகமாக பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக உள்ள மரவியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டு அங்கு நாய்களுக்கான பிரத்தியேக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பூங்காவில் குழந்தைகளுக்காக சிறப்பு உபகரணங்கள் இருப்பது போல் இங்கு நாய்களுக்கான சிறப்பு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் புற்களால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை, காய்ந்த இலைகள் மூலம் செய்யப்பட்ட குளம், விளையாட்டு தளம், நாய்களை குளிப்பாட்ட ஷவர் உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் ஐதராபாத்தில் முதன்முதலில் நாய்களுக்காக பிரத்தியேக பூங்கா அமைக்கப்பட்ட நிலையில் அதைத்தொடர்ந்து சண்டிகர் உள்பட பல இடங்களில் நாய்களுக்காக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்ட உதகையில் முதல் முறையாக நாய்களுக்கான பூங்கா கொண்டுவரப்ட்டடடுள்ளது.
வருவாய் துறைக்கு சொந்தமான உதகை மரவியல் பூங்காவில் நாய்களுக்காக பிரத்தியேக பூங்கா அமைக்கப்பட்டு நாய்களுக்கு மிகப்பெரிய புத்துணர்வு மையமாக இது இருக்கும்.
இந்த பூங்காவில் நாய்களுக்கு நுழைவு கட்டணமாக 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. மேலும் செல்ல பிராணியான நாய்களை பதிவு செய்ய இன்று முதல் புதிய இணையதளம் துவங்கப்பட்டு அதில் பதிவு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பூங்காவில் எதிர் வரும் காலங்களில் நாய் கண்காட்சிக்காக வரும் நாய்களுக்கு பயிற்சி பெற அளிக்கப்படவுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN