Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச.)
பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் தரப்பினரின் சார்பில் புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டமும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டமும் வருகின்ற டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2025க்கு விடை கொடுப்போம். 2026ஐ வரவேற்போம். புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டமும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டமும் வருகின்ற 29.12.2025 திங்கட்கிழமை சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கில் நடைபெற உள்ளது.
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பா.ம.க. வ.ச. ச.மு.ச உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மாநகரப் பகுதி நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
குறிப்பு : மாநில செயற்குழு கூட்டம் 29.12.2025 காலை 10.00 முதல் 11.30 மணி வரை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மாநில பொதுக்குழு கூட்டம் 11.40 மணி முதல் நடைபெறும். இதனையே அழைப்பாக ஏற்று பங்கேற்க அழைக்கின்றேன். புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b