புதுச்சேரி முதல்வருடன் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சந்திப்பு!
புதுச்சேரி, 21 டிசம்பர் (ஹி.ச.) புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் மற்றும் தேர்தல் மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மான்சுக் மண்டாவிய திலாஸ்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி இல்லத்தில் சந்தித்தனர். இந
Nitin Nabin - Rangaswamy


புதுச்சேரி, 21 டிசம்பர் (ஹி.ச.)

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் மற்றும் தேர்தல் மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மான்சுக் மண்டாவிய திலாஸ்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி இல்லத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சபாநாயகர் செல்வம், மாநிலத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

வருகின்ற தேர்தலில் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக பாஜக செயல் தலைவர் மற்றும் மத்திய அமைச்சரை வரவேற்ற முதலமைச்சர் ரங்கசாமியின் அவர்களுடன் அவரின் ஆன்மீக குருவான அப்பா சாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

Hindusthan Samachar / ANANDHAN