Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 21 டிசம்பர் (ஹி.ச.)
சபரிமலை தங்க கொள்ளை சம்பவத்தில் சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் சி இ ஓ பங்கஜ்
பண்டாரி மற்றும் கோவர்தன் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும்
அவர்களது பங்கு குறித்து உண்ணி கிருஷ்ணன் போற்றி அளித்த வாக்குமூலம்
உள்ளிட்டவை தொடர்பான ரிமைண்ட் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்ட விபரங்கள்
வெளியாகியுள்ளன.
கேரளாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய சபரிமலை தங்க கொள்ளை விவகாரம் தொடர்பான
அதிர்ச்சி தரும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் சபரிமலை
தங்க கொள்ளை விவகாரத்தில் கோவர்தன் மற்றும் தங்க முலாம் பூசும் பணியில்
ஈடுபட்ட சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி
பங்கஜ் பண்டாரி ஆகியோரின் பங்கு குறித்து உன்னி கிருஷ்ணன் போற்றி அளித்த
வாக்குமூலம் சிறப்பு புலனாய்வு குழுவால் தயாரிக்கப்பட்ட ரிமாண்ட்
ரிப்போர்ட்டில் இடம்பெற்றுள்ளது.
கோவர்தனிடமிருந்து 470 கிராம் தங்கம்
கைப்பற்றப்பட்டுள்ளது. செய்கூலியாக பங்கஜ் பண்டாரி வாங்கிய தங்கத்திலிருந்து
150 கிராம் சிறப்பு புலனாய்வு குழுவால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுக்கு தேவசம் போர்டு ஊழியர்களோடு காணப்பட்ட நெருக்கமான தொடர்பு குறித்தும் ரீமாண்ட் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது மட்டுமின்றி
முன்னாள் தேவசம்போர்டு உறுப்பினர்களான சங்கரதாஸ் விஜயகுமார் போன்றோரிடம்
விசாரணை மேற்கொள்ளவும் சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.
கைதான பங்கஜ்
பண்டாரி மற்றும் பெல்லாரி நகைக்கடை உரிமையாளர் கோவர்தன் ஆகியோரை காவலில்
எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கையையும் சிறப்பு புலனாய்வு குழு
துவங்கியுள்ளது.
மேலும் 474 கிராம் தங்கம் தனது கையில் கிடைத்த போது குற்ற
உணர்வு ஏற்பட்டதாகவும் அதற்கு பரிகாரமாக சபரிமலைக்கு அன்னதானம் மற்றும் மாளிகை
புரத்திற்கு மாலை வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் பணம் வழங்குமாறு உன்னி
கிருஷ்ணன் போற்றி தன்னிடம் கூறியதாக நகைக்கடை உரிமையாளர் கோவர்தன் சிறப்பு
புலனாய்வு குழுவுக்கு அளித்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam