Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச)
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுகவில் அண்மையில் இணைந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் விருப்ப மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிடுவதற்காக விருப்பம் மனு வழங்கியுள்ளேன். அதேபோல பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட வேண்டும் என்று மற்றொரு மனுவையும் வழங்கி இருக்கிறேன்.
எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன் செங்கோட்டையில் என்னை எதிர்த்து போட்டுவிட்டால் 20 ஆயிரம் வாக்குகள் கூட பெற மாட்டார் அந்த அளவிற்கு மக்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர்.
எங்களை களத்தில் இல்லை என்றால் விஜய் சொல்கிறார் ஆனால் அவர் ஒரு சினிமா பட பாணியிலேயே இருக்கிறார் கதாநாயகனாக விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார் அதில் தாத்தாவாக செங்கோட்டையன் இருக்கிறார்.
கோபிசெட்டிபாளையம் அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ