Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 21 டிசம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 20) மாலை 4 மணியளவில் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார்.
தொடர்ந்து ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள, அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தவும், தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்தவைத்தார்.
இந்தநிலையில், இன்று (டிசம்பர் 21) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு சென்றார்.
அங்கு அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மொத்தம் ரூ.639 கோடியில், காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் உள்பட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.
விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனிடையே, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பஸ் போக்குவரத்து சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Hindusthan Samachar / vidya.b