ரயிலில் ஏற்பட்ட சண்டை- தம்பதி கீழே குதித்து தற்கொலை
தெலங்கானா, 21 டிசம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்திலுள்ள ராவு பள்ளி கிராமத்தை சேர்ந்த கொரடா சிங்காசலம் (25), அதே பகுதியை சேர்ந்த அங்கவரம் கிராமத்தை சேர்ந்த பவானி (19) ஆகியோர் இரண்டு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய
ரயில்


தெலங்கானா, 21 டிசம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்திலுள்ள ராவு பள்ளி கிராமத்தை

சேர்ந்த கொரடா சிங்காசலம் (25), அதே பகுதியை சேர்ந்த அங்கவரம் கிராமத்தை

சேர்ந்த பவானி (19) ஆகியோர் இரண்டு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து

கொண்டனர்.

திருமணத்திற்கு பின் அவர்கள் ஹைதராபாத் ஜக்காரெட்டி கூடத்தில் இருக்கும்

காந்தி நகரில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி வேலை செய்து கொண்டிருந்தனர்.

இதற்கிடையே செகந்திராபாத் வந்த அவர்கள் அங்கிருந்து விஜயவாடாவில் உள்ள உறவினர்

வீட்டுக்கு செல்வதற்காக நேற்று மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு

சென்றனர்.

ரயில் பயணத்தின் போது இரண்டு பேருக்கும் இடையை ஏதோ காரணத்தால் வாக்குவாதம்

ஏற்பட்டு சண்டை வந்தது.

ரயில் வங்கலப்பள்ளி ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது இரண்டு

பேரும் ரயில் பெட்டியின் கதவு அருகே நின்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் சற்று தூரத்தில் இரண்டு பேரும் ரயிலில் இருந்து கீழே விழுந்து

உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற அரசு ரயில்வே போலீசார் இரண்டு பேரின் உடல்களையும்

கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி

வைத்து அவர்களுடைய மரணத்திற்கான காரணம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை

நடத்துகின்றனர்.

குடும்ப பிரச்சினை, பொருளாதார சூழல் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் தற்கொலை

செய்து கொண்டார்களா அல்லது காதல் திருமணம் தொடர்பான குடும்ப ரீதியிலான

கருத்து வேறுபாடுகளை முன்னிட்டு அவர்களை யாராவது ரயிலில் இருந்து தள்ளி

விட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

இதற்கிடையே இரண்டு பேரும் ரயிலில் பயணித்த போது சண்டை போட்டுக் கொண்டது

தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவை கைப்பற்றி இருக்கும் போலீசார் அந்த வீடியோவை பதிவு செய்தது

யார் அந்த ரயில் பெட்டியில் பயணித்தவர்கள் யார் யார் என்று விசாரணை

நடத்துகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam