குடிப்பதற்கு பணம் தர மறுத்த தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த மகன் கைது!
திருவண்ணாமலை, 21 டிசம்பர் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் குடிப்பதற்கு பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த கொடூர மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வந்தவாசி அடுத்த விளாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர
TVM Murder Case


திருவண்ணாமலை, 21 டிசம்பர் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் குடிப்பதற்கு பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த கொடூர மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வந்தவாசி அடுத்த விளாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (55) இவருக்கு செல்வி (50) என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

முருகனுக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்து வருவதால் குடித்துவிட்டு வீட்டிற்கு வராமல் மூன்று மாதமாக கிருஷ்ணாபுரம் கூட்டுச்சாலையில் உள்ள பேருந்து நிழற்குடையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முருகன் மகன் சரத்குமார் (34) மாலை போட்டுக்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு வந்துள்ளார்.

அப்போது சரத்குமார் மாலையை கழட்டி விட்டு மது அருந்திவிட்டு மேலும் குடிப்பதற்கு கிருஷ்ணாபுரம் கூட்டுச்சாலை பேருந்து நிழற்குடையில் தங்கியிருந்த அவரது தந்தை முருகனிடம் சென்று குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

குடிப்பதற்கு பணம் தராததால் சரத்குமார் பக்கத்துக் கடையில் இருந்த கட்டையை எடுத்து தந்தையை கூட பார்க்காமல் தலையிலும் முகத்திலும் சரமாறியாக தாக்கி உள்ளார். இதில் முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்த வடவணக்கம்பாடி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிப்பதற்கு பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த சரத்குமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குடிப்பதற்கு பணம் தர மறுத்த தந்தையை மகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் விளாநல்லூர் கிராமத்தில் பெரு சோகத்தை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / ANANDHAN