Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 21 டிசம்பர் (ஹி.ச.)
வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்கள் அதிக அளவு சுங்கச்சாவடியை கடந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னையில் வசிப்பவர்கள் திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழியர்கள் என லட்சக்கணக்கான பொதுமக்கள் சொந்த ஊரில் விடுமுறையை கழிப்பதற்கு கார் வேன் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
அப்பொழுது ஆயிரக்கணக்கான வாகனங்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு வந்ததால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் வழித்தடங்களில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து சென்று சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் எதிர் திசையில் உள்ள ஒரு வழித்தடங்களை தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களை செல்லுமாறு மாற்றி அமைத்துள்ளனர்.
மேலும் சுங்கச்சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு போக்குவரத்து போலீஸார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைப்பதோடு விபத்து ஏற்படாமல் இருக்கவும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN