Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 21 டிசம்பர் (ஹி.ச.)
திராவிடர் கழகம் சார்பில் இது தான் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சி, இது தான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி எனும் தலைப்பில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியின் தொடர் பரப்புரை பயணத்தின் ஒரு பகுதியாக கும்பகோணம் பழைய மீன் அங்காடி பகுதியில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, கும்பகோணம் மாவட்ட தலைவர் நிம்மதி தலைமை வகித்தார்.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன்
தொடக்கவுரை நிகழ்த்தியதை தொடர்ந்து சிறப்புரையாற்றிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
அயோத்தியை வைத்து ஆட்சியை பிடித்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது அந்த
அயோத்தியிலேயே வெற்றி பெற முடியாமல், எதிர்கட்சிகள் அதிக இடங்களை வென்றுள்ளது.
பாஜக என்ன செய்தாலும் தமிழகத்தில் அவர்களுடைய வித்தைகள் பலிக்காது, வாக்காளர்கள்
அனைவரும் சிந்திக்க வேண்டும், எதிலும் ஏமாந்து விடக்கூடாது என்று தெரிவித்தார்.
முதலில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரி பாருங்கள் என்றும், உள்துறை அமைச்சர்
அமித்ஷா குஜராத் மாநிலத்தில் ஒரு அரசு நிகழ்ச்சியில் பேசும் போது கூட, தமிழகத்தில் திமுகவை துடைத்தெறிவோம் என பேசியுள்ளார்.
பேய் பிசாசு போல ஸ்டாலின் அவரை உலுக்கி கொண்டு இருக்கிறார். அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய் என்பது போல ஸ்டாலினை கண்டு அவர் எப்போதும் மிரண்டு
வருகிறார்.
தமிழகத்தில் உங்கள் எண்ணம் ஒரு போதும் வெற்றியடையாது, மாறாக,
திராவிட மாடல் திமுக அரசு, சிறப்பான வெற்றி கண்டு, முன்னைவிட கூடுதல் இடங்களை
பெற்று ஆட்சி அமைக்கும், மீண்டும் திராவிடம் வெல்லும் அதை என்றைக்கும்
சொல்லும் என்றும், எனவே நீங்கள் திமுக கூட்டணியை குழைக்கவும் முடியாது,
ஆட்சியை பெறவும் முடியாது என்றும் பாஜகவிற்கு பதிலளிக்கும் வகையில்
திட்டவட்டமாக குறிப்பிட்டு பேசினார்.
இக்கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணி
கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த
கி. வீரமணி தனது பேட்டியில் கூறியதாவது;
கோட்ஷே கூட மகாத்மா காந்தியை ஒரு முறை தான் கொன்றான். ஆனால் அவரை பலமுறை
தத்துவ ரீதியில் கொன்று கொண்டே தான் இருக்கிறார்கள். இப்படி தான் நூறு
நாள் வேலை திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கி விட்டு, அவரது
தத்துவத்திற்கு எதிராக நடந்து கொள்கிறார்கள்.
நாடாளுமன்ற அவையிலேயே கோட்ஷேவை
புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். மகாத்மா காந்தி காட்டிய அகிம்சை பதிலாக
வன்முறையை காட்டி வரும் இவர்கள், ஜனநாயகத்தை புதைத்து விட்டால் ரூபாய்
நோட்டில் உள்ள மகாத்மா காந்தி படத்தை எடுத்து விட்டு அதற்கு பதிலாக கோட்ஷே
படத்தை போட்டாலும் அதில் அதிசயம் ஒன்றும் இல்லை.
இவ்வாறு அவர் பேட்டியில் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam