Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச.)
பிரபல யூடியூபரும் பத்திரிகையாளருமான பெலிக்ஸ் ஜெரால்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.
தவெகவில் இணைந்தது குறித்து புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஜெரால்டு கூறுகையில் 51 வயது நிரம்பிய நிலையில், நான் கடந்த 12 ஆண்டுகளாக வளர்த்தெடுத்த வணிகப் பொறுப்புகளிலிருந்து விலகி, அடுத்த தலைமுறைக்கான புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு இயக்கத்தில் இணைய முடிவு செய்துள்ளேன்.
தமிழகத்தின் எதிர்காலமாகவும், நம்பிக்கையாகவும் கருதப்படும் எனது முன்னாள் வகுப்புத் தோழரும், சகத் தோழருமான திரு. விஜய்யைச் சந்தித்தது மகிழ்ச்சி. விஜய், இதை நாம் நிச்சயம் செய்து முடிப்போம்! என்று பெலிக்ஸ் பதிவிட்டுள்ளார்.
பெலிக்ஸ் ஜெரால்டு, ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் மூலம் தமிழக அரசியலை ஆழமாக பகுப்பாய்வு செய்து வரும் மூத்த ஊடகவியலாளர் ஆவார். அரசியல் நிகழ்வுகள், தேர்தல் நிலவரம், சமூகப் பிரச்சினைகள் குறித்த அவரது கருத்துக்கள் பரவலாக கவனம் பெற்றவை ஆகும்.
கடந்த ஆண்டு பெண் காவலர்கள் குறித்த அவதூறு செய்தியை ஒளிபரப்பிய புகாரில் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெராலட்டை கடந்த ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி இரவு டெல்லியில் திருச்சி தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b