Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 டிசம்பர் (ஹி.ச)
ரயில் கட்டணம் வரும் 26 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண வகுப்புகளில் 215 கி.மீக்கு மேல் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 கிலோ மீட்டர் வரையிலான ரயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுகிறது.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் ரயில் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. புறநகர் ரயில்கள், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டண உயர்வு இல்லை. சாதாரண வகுப்பில், 215 கிமீ வரை பயணிப்போருக்கு கட்டண உயர்வு ஏதும் கிடையாது.
முன்பதிவில்லாத சாதாரண வகுப்பில், 215 கிமீக்கு மேல் பயணிப்போருக்கு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிப்பட்டு உள்ளது. 215 கி.மீ தூரத்திற்கு மேல் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஏசி, ஏசி இல்லாத வகுப்பில் பயணிப்போருக்கு ஒரு கிமீக்கு 2 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கட்டண உயர்வால் இந்த ஆண்டில் கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும்.
ஏசி இல்லாத பெட்டிகளில் 500 கி.மீ பயணத்திற்கு, பயணிகள் 10 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே நிர்வாகம் தனது சேவைகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், அதிகம் கவனம் செலுத்துகிறது. இதன் விளைவாக செலவு ரூ. 1,15,000 கோடியாக அதிகரித்துள்ளது. 2024-25ம் ஆண்டில் மொத்த செயல்பாட்டுச் செலவு 2,63,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதிக செலவினங்களை சமாளிக்க, பயணிகள் கட்டணத்தில் ஒரு சிறிய அளவு மாற்றம் செய்யப்படுகிறது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சரக்கு போக்குவரத்து ரயில்வேயாக மாறியுள்ளது.
சமீபத்தில் பண்டிகைக் காலங்களில் 12,000க்கும் மேற்பட்ட ரயில்களை வெற்றிகரமாக இயக்கப்பட்டு இருக்கிறது.
தனது இலக்குகளை அடைவதற்காக, ரயில் சேவைகளை அதிகரிக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b