Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 21 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சிற்பங்களுக்கு பெயர்போன ஊராகும். இந்த ஊர் முழுவதும் தொல்லியத்துறையின் பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. பல்லவர் காலத்து கட்டிடகலைக்கு எடுத்துக்கட்டாக பல்வேறு இடங்கள் உள்ளன.
சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகாபலிபுரத்திற்கு தினமும் வருகிறார்கள்.
இன்று (டிசம்பர் 21) ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை கோவில், ஐந்தரதம் போன்ற புராதன பகுதிகள் நிரம்பி காணப்பட்டது. கடற்கரை பகுதியில் குடும்பம், குடும்பமாக குவிந்த சுற்றுலா பயணிகள், கடலில் குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக தங்கள் பெற்றோருடன் குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும் கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.
கடற்ரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க ஏராளமான போலீசார் சாதாரண உடையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் புராதன சின்னங்களை நோக்கி சென்றதால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b