Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கு இன்று (டிச.22)முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
வேளாண்மை உதவி இயக்குநர், உதவி மேலாளர்(சட்டம்), முதுநிலை கணக்கு அலுவலர், முதுநிலை கணக்கு அலுவலர் - 3, மேலாளர் (நிதி) உள்ளிட்ட 14 பொறுப்புகளில் காலியாக உள்ள 76 காலிப் பணியிடங்களுக்கு இன்று (டிச.22) முதல் ஜனவரி 20 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வயது உச்ச வரம்பு இல்லை. தாள் 1 மற்றும் 2 தேர்வுகள் 2026 மார்ச் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. மேலும் தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
தேர்வர்கள் www.tnpscexams.in எனும் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் (OTR) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலாம்.
இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளுக்குப் பின்னர், விண்ணப்பத் திருத்தம் 24.01.2026 முதல் 26.01.2026 வரை மூன்று நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்.
இக்காலத்தில் தேர்வர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்ய இயலும், விண்ணப்பத் திருத்தச் சாளரக் காலம் முடிந்த பின்னர் இணையவழி விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
இணையவழி விண்ணப்பத்தில் உரிய விவரங்களைப் பதிவு செய்த பின்னர், விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் தேர்வர் தேர்வுக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும்.
தேர்வர் உரிய சேவைக் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும். இணையவழியில் தேர்வுக் கட்டணம் செலுத்தாமல், நேரடியாக செலுத்தும் வரைவு காசோலை, அஞ்சலக காசோலை போன்றவை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b