இன்று முதல் குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி - வனத்துறை அறிவிப்பு
நீலகிரி, 22 டிசம்பர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப் பிரதேசமான குன்னூர் அம்மாவட்டத்தில் ஊட்டிக்குப் பிறகு இரண்டாவது பெரிய மலைப்பிரதேசம் ஆகும். சிம்ஸ் பார்க், டால்பின்ஸ் நோஸ் மற்றும் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா
இன்று முதல் குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி - வனத்துறை அறிவிப்பு


நீலகிரி, 22 டிசம்பர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப் பிரதேசமான குன்னூர் அம்மாவட்டத்தில் ஊட்டிக்குப் பிறகு இரண்டாவது பெரிய மலைப்பிரதேசம் ஆகும். சிம்ஸ் பார்க், டால்பின்ஸ் நோஸ் மற்றும் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களும் இங்கு அமைந்துள்ளது.

1550 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டால்பினோஸ் ஒத்த வடிவமுள்ள அசாதாரண பாறை இதுவாகும்.குன்னூரிலிருந்து டால்பின் நோஸ் செல்லும் பகுதியே மிகவும் ரம்மியமாக இருக்கும். இரு பகுதிகளிலும் அடர்ந்த தேயிலை தோட்டம் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும்.

இந்த இடம் தற்போது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மிகவும் உயரமான இடம் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள், சீரமைப்பு மற்றும் மேம்பாடு பணிகள் மேற்கொள்ள ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த செப். 12ம் தேதி மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து மக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் இன்று (டிசம்பர் 22) முதல் டால்பின் நோஸ் காட்சி முனை திறக்கப்படுகிறது எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

இங்குள்ள பகுதியில் நடைபாதை பராமரிப்பு, கழிப்பிடம், தடுப்பு வேலிகள் தற்போது அமைக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது ஊட்டியில் உறை பனி நிலவி வரும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்துள்ளனர்.

அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட டால்பின் நோஸ் காட்சி முனை புதிய அனுபவத்தை கொடுக்கும் என தெரிகிறது.

Hindusthan Samachar / vidya.b