Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 டிசம்பர் (ஹி.ச)
வட இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு கடும்பனி நிலவும். இதனால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வடஇந்தியாவில் கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நடப்பாண்டு வடமாநிலங்கள் அதிகமான பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன.
தலைநகர் டெல்லியிலும் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. சாலைகளில் எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமானங்கள், ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், மூடுபனி 2 நாட்களுக்கு வட இந்தியா முழுவதும் நிலவும். இதனால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கக்கூடும். மூடுபனியின் தீவிரம் படிப்படியாக குறையக்கூடும் என்று தெரிவித்தனர்.
இந்த சூழலில், இன்று
(டிசம்பர் 22) விமானங்கள், ரயில்கள் சேவை சற்று மேம்பட்டிருந்தாலும் திடீர் வானிலை மாற்றங்கள் காரணமாக சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு, விமான நிறுவனங்கள் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளன.
பயணிகள் விமான நிலையத்திற்கு வருபவதற்கு முன்பு, தங்களது விமான நிலையை இணையத்தளத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / vidya.b