இந்திய துணைக் கண்டத்தின் இறுதி முனையாக இருந்த தனுஷ்கோடி 61 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த தினம்!
ராமநாதபுரம், 22 டிசம்பர் (ஹி.ச.) கடந்த 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி இரவு உறங்க சென்ற தனுஷ்கோடி வாழ் பொதுமக்கள் கண் விழிக்காமலே அவர்களின் கதை முடிந்தது. அன்று இரவு மன்னார்வளைகுடா பாக்ஜலசந்தி பகுதியில் வீசிய பலத்த புயல் காற்றில் 25 அடி உயர
Dhanushkodi


ராமநாதபுரம், 22 டிசம்பர் (ஹி.ச.)

கடந்த 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி இரவு உறங்க சென்ற தனுஷ்கோடி வாழ் பொதுமக்கள் கண் விழிக்காமலே அவர்களின் கதை முடிந்தது.

அன்று இரவு மன்னார்வளைகுடா பாக்ஜலசந்தி பகுதியில் வீசிய பலத்த புயல் காற்றில் 25 அடி உயர அலைகள் தாக்கியதில் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த நகரம் மண்ணுக்குள் மண்ணாக கடலுக்குள் சென்றது.

வர்த்தக நகரமாக வளம் கொழிக்கும் நகரமாக ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்ற வணிக தலமாக இருந்த தனுஷ்கோடி இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு இரையானது.

சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்ற ரயில் கூட கடல் அலைகளின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கடலில் கவிழ்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். தனுஷ்கோடி நகரம் மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது தனுஷ்கோடிக்கு செல்ல சாலை அமைக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்கும் அழிந்து போன அந்த நகரத்தின் மிச்சமுள்ள சுவடுகளை பார்வையிடவும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

எவ்வளவோ தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் இன்னும் கூட அங்கு மனிதர்கள் வசிப்பதற்கான சூழல் ஏற்படவில்லை என்பது தான் உண்மை.

Hindusthan Samachar / ANANDHAN