அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு திட்டங்களை நிறைவேற்றவில்லை - இபிஎஸ் குற்றச்சாட்டு
சேலம், 22 டிசம்பர் (ஹி.ச.) சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவுற்ற நலப்பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய எடப்பாட
இபிஎஸ்


சேலம், 22 டிசம்பர் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவுற்ற நலப்பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;

இளைஞர்கள், மாணவர்கள் எடப்பாடி நகரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உன் விளையாட்டு அரங்கம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் நிதி ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பிறகு மாணவர்கள் இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவும் 30 வார்டுகளில் தடையில்லாமல் காவிரி குடிநீர் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நெடுஞ்சாலை அமைச்சராக இருந்தபோது, அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தபோது, தங்கு தடை இன்றி காவிரி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வறண்ட ஏரிகள் நிரப்ப வேண்டும் என்பதற்காக நீர் நிரப்பும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை.. வேண்டுமென்ற திட்டமிட்டு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டமாக இருந்த போதும், ஆளும் அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் திட்டம் நிறைவேற்றப்படும். குடிப்பதற்கு குடிநீரும்,நல்ல சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam