இபிஎஸ்-ஐ சந்திக்கும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்!
தமிழ்நாடு, 22 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வருகை தரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு
பியூஷ் கோயல்


தமிழ்நாடு, 22 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வருகை தரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. மேலும் கூட்டணியில் பல கட்சிகளை இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகை தர உள்ளார்.

தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் முதல்முறையாக வருகை தரும் நிலையில், கூட்டணியை வலுப்படுத்துவது, கூட்டணி விரிவாக்கம், தொகுதி பங்கீடு குறித்து இபிஎஸ்-ஐ அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam