ஒரு லட்சத்தை தாண்டிய தங்கம் விலை - அதிரடியாக அதிகரிப்பு!
சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.) சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது. கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகின்றன. இதற்கிடையே, திருமண சீசன், கிறிஸ்துமஸ் மற்றும் புத்த
தங்கம்


சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது.

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகின்றன. இதற்கிடையே, திருமண சீசன், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரவுள்ள நிலையில், நகை வாங்க முடியாமல் நடுத்தர மக்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் சவரனுக்கு 1360 ரூபாய் அதிகரித்து ரூ.1,00,580 ஆக உயர்ந்துள்ளது.

முற்பகலில் ரூ. 640 அதிகரித்த தங்கம் பிற்பகலில் ரூ.720 அதிகரித்துள்ளது.

முற்பகலில் ஒரு சவரன் ரூ.99,840 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், பிற்பகலில் ஒரு சவரன் ரூ.1,00,580 ஆக அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒரு கிராம் ரூ.12,480 க்கு முற்பகலில் விற்பனை செய்யப்பட்ட தங்கம், பிற்பகலில் ரூ. 12,570 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam