இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் வழிபாடு
திருப்பதி, 22 டிசம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, வரும், டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, ''புளூபேர்ட்'' செயற்கைக்கோள் விண்ணி
இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் வழிபாடு


திருப்பதி, 22 டிசம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, வரும், டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. நாளை (டிசம்பர் 23) காலை கவுன்டவுன் தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று

(டிசம்பர் 22) இந்த திட்டம் வெற்றி பெற, இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் வழிபாடு நடத்தினார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு பிரசாரதம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்படும் அமெரிக்க செயற்கை கோள், ககன்யான், சந்திரயான் - 4 திட்டங்கள் குறித்து விளக்கினார். 2027ல் சந்திரயான் - 4 திட்டம் முழுமை பெறும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b