Enter your Email Address to subscribe to our newsletters

இஸ்லாமாபாத், 22 டிசம்பர் (ஹி.ச.)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே தோஷகானா கானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தயாராகும்படி இம்ரான்கான் தனது கட்சியினர் மற்றும் ஆதரவா ளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான்கான்,
'பக்துன்க்வா முதல்-மந்திரி சோஹைல் அப்ரிடிக்கு கைபர் மாகாண போராட் டத்திற்குத் தயாராகும்படி நான் ஒரு செய்தியை அனுப்பியுள்ளேன். முழு தேசமும் அதன் உரிமைகளுக்காக எழுந்து நிற்க வேண்டும்.
இந்தத் தீர்ப்பு எந்த ஆதாரமும் இல்லாமல், சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் நீதிபதியால் அவசரமாக வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் எனது சட்டக் குழுவின் வாதங்கள் கேட்கப்படவே இல்லை.
என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM