ஜம்மு தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் அருகே சீன முத்திரை கொண்ட துப்பாக்கி மற்றும் தொலைநோக்கி கண்டுபிடிப்பு
ஜம்மு, 22 டிசம்பர் (ஹி.ச.) ஜம்முவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை அடுத்து உச்சகட்ட எச்சரிக்கை நிலவி வருகிறது. இந்நிலையில் ஜம்முவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் அருகே சீனா முத்திரை கொண்ட துப்பாக்கி மற்றும் அதனுடன் பயன்படுத்தப்படும் தொலை நோ
ஜம்மு தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் அருகே சீன  முத்திரை கொண்ட துப்பாக்கி மற்றும் தொலைநோக்கி கண்டுபிடிப்பு


ஜம்மு, 22 டிசம்பர் (ஹி.ச.)

ஜம்முவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை அடுத்து உச்சகட்ட எச்சரிக்கை நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜம்முவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் அருகே சீனா முத்திரை கொண்ட துப்பாக்கி மற்றும் அதனுடன் பயன்படுத்தப்படும் தொலை நோக்கி ஒன்றையும் ஜம்மு போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்.

ஜம்முவில் போலீஸ் தலைமையகம், என்ஐஏ அலுவலகம், சிஆர்பிஎப், மற்றும் சீமா சுரக்ஷா பல் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் அருகருகே அமைந்துள்ளன.

நான்கு முக்கிய பாதுகாப்பு மையங்களுக்கு அருகிலேயே துப்பாக்கிதொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜம்மு போலீஸ் உயர் அதிகாரிகள் இது குறித்த மேலும் விவரங்களை தெரிவிக்க மறுத்தனர்.

முன்னதாக மாநிலத்தில் நிலவும் மூடுபனியை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை நடத்த கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM