கியூட் தேர்வுக்கு ஜனவரி 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வுகள் முகாமை அறிவிப்பு
புதுடெல்லி, 22 டிசம்பர் (ஹி.ச.) 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு கணினி வழியில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த
கியூட் தேர்வுக்கு ஜனவரி 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வுகள் முகாமை அறிவிப்பு


புதுடெல்லி, 22 டிசம்பர் (ஹி.ச.)

2026-27 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு கணினி வழியில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் 4 மையங்களில் தேர்வு செய்யலாம். அதில் ஒரு தேர்வு மையம் அவர்களுக்கு ஒதுக்கப்படும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 14ம் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://exams.nta.ac.in/CUET-PG/, /www.nta.ac.in/ ஆகிய வலைத்தகளில் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகாமை அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b