தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து வேலைவாய்ப்பு, மகளிர் உரிமை, விவசாயங்களை பாதுகாப்பது, மாநில உரிமை போன்றவற்றை உள்ளடக்கி திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் - கனிமொழி எம்.பி
சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச) 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி தலைமையில் மொத்தம் 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் திமுக தலைமை அலு
Kani


சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச)

2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி தலைமையில் மொத்தம் 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி :

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் எந்தெந்த மாவட்டத்திற்கு செல்ல இருக்கிறோம் யாரையெல்லாம் சந்திக்க உள்ளோம் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும், திமுக தேர்தல் அறிக்கை முதலமைச்சர் உடைய ஆலோசனைகளை பெற்று தமிழகத்தின் வளர்ச்சியை கணக்கில்கொண்டு உருவாக்கப்படும் என்றார்.

வேலை வாய்ப்புகள், மகளிர் உரிமை, விவசாயிகளை பாதுகாப்பது, மத்திய அரசாங்கம் வேலைவாய்ப்பை பறிப்பதை ஒரு வேலையாக பார்த்துக் கொண்டிருக்க கூடிய இந்த நேரத்தில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, மாநில உரிமைக்கு போராடுவது இதையெல்லாம் கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ