Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம் டிசம்பர் 28ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், 27.12.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறுகிறது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் தாயகத்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b