பள்ளபட்டி சிப்காட்டில் உலகத் தமிழ் வர்த்தக மையம் சார்பில் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம்
திண்டுக்கல், 22 டிசம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டி தொழிற்பூங்காவில் (சிப்காட்டில்) உலகத் தமிழ் வர்த்தக மையம் சார்பில் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உலகத் தமிழ் வர்த்தக மைய இயக்குநர்
Pallapatti Sipcot


திண்டுக்கல், 22 டிசம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டி தொழிற்பூங்காவில் (சிப்காட்டில்) உலகத் தமிழ் வர்த்தக மையம் சார்பில் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு உலகத் தமிழ் வர்த்தக மைய இயக்குநர் நாச்சிமுத்து தலைமை வகித்தார்,திண்டுக்கல் நாகா புட்ஸ் நிர்வாக இயக்குநர் கமலக்கண்ணன,திருவள்ளூர் பல்கலை துணைவேந்தர் ஆறுமுகம், மதுரை மண்டல வணிகர் சங்க தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,நிர்வாக இணை இயக்குநர் கனிமொழிமதி வரவேற்றார்.

கூட்டத்தில் உலகத் தமிழ் வர்த்தக மையம் சார்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடைப்படையில் மத்திய,மாநில அரசுகளின் உதவியோடு சிறுகுறு புதிய இளம் ஏற்றுமதியாளர்களை,வணிகர்களை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு, தற்சார்பு உற்பத்தியாளர்களை ஊக்குவித்து தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு மேட் இன் தமிழ்நாடு என்றே ஏற்றுமதி செய்யப்படும்.

அந்ததந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உலக நாடுகள் அனைத்திற்கும் ஏற்றுமதி செய்ய வசதிகள் செய்து தரப்படும் இதன் மூலம் வருடத்திற்கு 1000 முதல் 2000 கோடி வரை வணிகம் செய்யப்படும் இதன் மூலம் சுமார் 10000 இளைஞர்களுக்கு சுயதொழில் வேலைவாய்புகள் ஏற்படுத்தப்படும்.

மரபு சார்ந்த மருத்துவம் சார்ந்த உணவுப்பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உலக தமிழர்களிடம் கொண்டுசெல்லப்படும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

மேலும் இந்த கூட்டத்தில் மாநில மண்டல அளவிலான வளரும் இளம் தொழில் பயிற்றுனர்கள், வல்லுனர்கள், பல்வேறு தொழிற்சாலை நிர்வாகத்தினர், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN