Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 டிசம்பர் (ஹி.ச.)
நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை ரூ.50 லட்சத்திற்கு வாங்கியதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் ஆகியோர் ரூ. 2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறித்ததாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, 2014ல் வழக்கு தொடர்ந்தார்.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை நிராகரித்த நீதிமன்றம், ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கருதி குற்றப்பத்திரியையை நிராகரித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam