Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 22 டிசம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு வந்துள்ள ஈமெயில் தகவலில் சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமாரின் திருவான்மியூர் வீடு, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் என ஈமெயில் வந்ததாக தெரிகிறது
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொடுத்த தகவலின் பெயரில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பாம் ஸ்குவாட் மட்டும் டாக் ஸ்குவாட் படையினர் மோப்பநாய் தேவசேனா மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து தளங்களையும் துருவி துருவி சோதனை செய்தனர்.
தொடர்ந்து அந்த சோதனை நடந்து வருகிறது. அது மட்டுமின்றி மெட்டல் டிடெக்டர் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த மெயிலை யார் அனுப்பினார்கள்? எதற்காக அனுப்பினார்கள் என்பது குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN