மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்
திண்டுக்கல், 22 டிசம்பர் (ஹி.ச.) அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இது தவிர எளிதாக சென்று வர ரோப் கார், மின்இழுவை ரெயில் ஆகிய
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்


திண்டுக்கல், 22 டிசம்பர் (ஹி.ச.)

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன.

இது தவிர எளிதாக சென்று வர ரோப் கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்ல முடியும் என்பதால் ரோப்கார் சேவையை குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

பழனி ரோப் கார் சேவையானது காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படுவதால் பலமாக காற்று வீசுமபோது சேவை நிறுத்தப்படும்.

அதே போல் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்போதும் சேவை நிறுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (திங்கள் கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாகவும், பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM