Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியின் அம்பத்தூா் மண்டலத்தில் தூய்மைப் பணியாளா்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பணியில் உள்ளனா்.
ஆனால், கூடுதலான எண்ணிக்கையை குறிப்பிட்டு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன் ஆணையரிடம் புகாா் மனு அளித்தாா். அதன்படி விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில், தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியம் வழங்கியதில் முறைகேடுக்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
அதனால், திடக்கழிவு மேலாண்மை பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கிடையே, ஊதிய முறைகேடு நடந்திருப்பதை ஆதாரப்பூா்வமாகக் கண்டறியும் வகையில் தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த ஜூன் முதல் அக்டோபா் வரையிலான ஊதிய விவரங்கள் கோரி சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு விசாரணை குழுவினா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.
அதில், ஊதியம் பெற்றவா்களது வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட முழு விவரங்கள் 5 மாதங்களுக்கு வழங்கப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam